×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும்: அருணா ஜெகதீசன் அறிக்கையில் தகவல்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தான் தெரிவித்த தகவலின் ஆதாரத்தை ரஜினிகாந்த் உறுதி செய்திருக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வந்தது. இந்த விவகாரத்தில், நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம் என பேட்டியளித்திருந்தார்.

இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இந்தக் கருத்து குறித்து நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில் ரஜினிக்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதற்கு எழுத்து மூலம் பதில் அளித்த ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் ஆலை வன்முறை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. வன்முறையை ஏவிவிட்டது சமூக விரோதிகளாக இருக்கலாம் என்றுதான் நினைத்தேன். அப்படி எந்த சமூக விரோதியையும் எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக ஆணையத்தின் அறிக்கையில், சமூக விரோதிகளால்தான் கலவரம் உண்டானது என்று தான் கூறியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என ரஜினி கூறினார்.

ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rajinikanth ,Thoothukudi ,Aruna Jekadeesan , Rajinikanth should have confirmed the source of his information on Tuticorin firing: Aruna Jagadeesan in report
× RELATED தூத்துக்குடி மத்திய பாகம் காவல்...